15 மாவட்டங்களில் வெள்ள அபாயம்: வீடுகளுக்குள் தண்ணீர்- இதுவரை 70 பேர் பலி
சென்னை:
![]() |
வங்கக் கடலில் ஏற்படட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டாலும் கலையாமல் மன்னார் வளைகுடாவில்தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தின் தென் பகுதி ஆகியவை முழுவதுமே கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன.
தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை தொடரும் சூழல் இருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
![]() |
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமப் பகுதிகளில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் உடைந்துநூற்றுக்கண்ககான கிராமங்கள் தண்ணீரில் தீவு போல மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்த மக்கள் சமூகக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, மருந்துகள், குடிநீர்வழங்கப்பட்டு வருகிறது.
![]() |
மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் கடலூர் மாவட்டம் தொழுதூரில் 170மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம்,மணிமுத்தாறு, சேர்வலாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆபத்தைதவிர்க்க சில அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது.
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து உபரி நீர் ஊருக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.
![]() |
தர்மபுரி தொப்பூரை அடுத்த செக்கதரப்பட்டியில் தொப்பையாறு அனண அமைந்துள்ளது. இந்த அணை 6 ஆண்டுகளுக்கு பிறகுமுழக் கொள்ளவான 50 அடியை எட்டியது. இதனால் அங்கு 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே அங்கு 23கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
![]() |
கிண்டி-சைதாப்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தமிழகத்தில் மழை வெள்ளம் ஆகியவற்றில் சிக்கிஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலியில் நிலக்கரி சுரங்களில் நீர் புகுந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

















Click it and Unblock the Notifications