சிறுமி மீது ஒருதலை காதல்: மாஸ்டர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் 12 வயது சிறுமி மீது இருந்த ஒரு தலைக் காதலால் 37 வயது கராத்தே மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை செல்வபுரம் சாலை செட்டி வீதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி கற்பகவல்லி. இவர்களது மகள் கவுசல்யா(வயது 12). துரைராஜ் இறந்து விட்டதால் கற்பகவல்லி தனது அக்கா ராதா வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.கவுசல்யா ராஜா வீதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி முடிந்த பிறகு கவுசல்யா, செட்டி வீதியில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் கராத்தே கற்று வந்தார். இந்த மையத்தைபாண்டியன் என்ற பாண்டியராஜன் (வயது 37) என்பவர் நடத்தி வந்தார்.

திருமணம் ஆகாத பாண்டியராஜனுக்கு கவுசல்யா மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் கற்பகவல்லிக்கு தெரியவந்தது. எனவே கவுசல்யாவை கராத்தே பயிற்சிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். கராத்தே பயிற்சிக்கு கவுசல்யாவைஅனுப்புமாறு பாண்டியராஜன் கூறியுள்ளார். ஆனால் கற்பகவல்லி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் கவுசல்யா வீட்டுக்கு சென்று கற்பகவல்லியிடம் கவுசல்யாவை கராத்தே பயிற்சிக்குஅனுப்புமாறு வற்புறுத்தியுள்ளார். கற்பகவல்லி மறுக்கவே தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கவுசல்யாவையும், கற்பகவல்லியையும்அரிவாளால் வெட்டினான்.

அரிவாளால் வெட்டப்பட்டதும் கவுசல்யாவும், கற்பகவல்லியும் துடிதுடித்து அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்காராதாவும், அவரது கணவர் கங்காதரனும் ஓடிவந்தனர். அவர்களையும் பாண்டியராஜன் அரிவாளால் வெட்டினான். அதன் பிறகுபாண்டியராஜன் தனது கையில் வைத்திருந்த சயனடை சாப்பிட்டார்.

4 பேரை அரிவாளால் வெட்டிய பாணடியராஜனை அக்கம்பக்கத்தினர் அடித்து உதைத்தனர். ஏற்கனவே சயனடை சாப்பிட்டிருந்தபாண்டியராஜன் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

உடனே இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார் அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்த கற்பகவல்லி, சிறுமி கவுசல்யா, ராதா, கங்காதரன் ஆகியோரை கோவை அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.

சயனடை சாப்பிட்ட பாண்டியராஜனையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போதுபாண்டியராஜன் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+