திருச்சி-நாகை-திருவாரூர்-பெரம்பலூர் பகுதிகளில் ஜெ.
திருச்சி:
திருச்சி-நாகை-திருவாரூர்-தஞ்சை-பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை முதலமைச்சர்ஜெயலலிதா இன்று பார்வையிட்டார்.
தொடர்மழை காரணமாக தமிழ்நாடே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏராளமான உயிர் சேதமும், பொருள் சேதமும்ஏற்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேத பகுதிகளை பர்வையிடுவதற்காக ஜெயலலிதா இன்று தனிவிமானம் மூலம்திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீங்கம் சென்றார். அங்கு அம்மா மண்டபம் பகுதியில்ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் செட்டி தோப்பு பகுதிக்கு சென்றார். அங்கு காவிரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளைபார்வையிட்டு கலெக்டரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
![]() |
பிறகு கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர் ஹெலிகாப்டரில் தஞ்சை புறப்பட்டார். தஞ்சையில் மாவட்டத்தில்உள்ள தஞ்சை அறநெறி உயர்நிலைபள்ளிக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைபார்த்து ஆறுதல் கூறினார்.அரசு நிவாரண உதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார். அம்மன் பேட்டைக்கு சென்றுவெள்ளப்பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து நாகைக்கு புறப்பட்டு சென்ற முதலமைச்சர் வெளிப்பாளையம் ராஜா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அவர்களுக்கு நிவாரணஉதவிப்பொருட்களையும் வழங்கினார். அங்கிருந்து அக்கரப்பேட்டை சென்று கல்லாறு பாலத்தை பார்வையிட்டார்.
பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் திரூவாருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கருப்பூர், புனவாசல், தற்காலிக முகாம்களுக்குசென்ற முதலமைச்சர் ஜெயலலிதா அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
முதலமைச்சரிடம் சில விவசாயிகள் நாங்கள் கடன் வாங்கி விதைத்த பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டது. உடனடியாகநிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மலக கோரிக்கை விடுத்தனர். அதனை முதலமைச்சர் பரிவுடன் கேட்டுக்கொண்டார்.
பிறகு அங்கிருந்து பெரம்பலூர் புறப்பட்டு சென்றார்.
பெரம்பலூரில் கீழவரப்பன் குறிச்சி கிராமத்துக்கு சென்ற அவர் மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து வீரமாமுனிவர் அடைக்கமாதா கோவில் நிவாரண முகாமுக்கு சென்றார். அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். பிறகு அங்கிருந்து திருச்சி திரும்பினார்.திருச்சி அண்ணா நகரில் உள்ள மலையப்பன் நகரில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று வெள்ள பாதிப்பு பற்றிமுதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முறையிட்டனர். அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர் வார வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். லட்சுமி நகரில் தெரு விளக்கு வசதி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அவற்றை உடனடியாக செய்து கொடுக்குமாறு கலெக்டருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
செட்டியார் தொப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கோரிக்கை மனு அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்டமுதல்வர், சுதர்சனம் நகர், அம்மா மண்டபத்தில் திரண்டு நின்று மக்கள் சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.அதையும் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அப்பணியை நிறைவேற்றுமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டார்.



Click it and Unblock the Notifications
