பிரமருக்கு ஜெ.கடிதம்: வெள்ள நிவாரணம்: ரூ.3000 கோடி முன் பணம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முன்பணமாக ரூ.3,000 கோடி மருமாறு பிரதமர்மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மழை வெள்ள சேதங்களை மத்திய அதிகாரிகள் குழு மதிப்பீடு செய்து திரும்பியவுடன் மீண்டும் தமிழகம் முழுவதும் மழைவெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டே நாட்களில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கிட்ட சேத மதிப்பீட்டைவிட கூடுதல் நிவாரண உதவி தேவைப்படுகிறது. இதனால், மேலும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் நிதியுதவிதேவைப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால்உபரி நீர் முழுமையாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வெள்ளப் பெருக்குஏற்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆற்றுப் படுகைகளில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஊர்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சாலைகள், பாலங்கள்போன்றவை சேதமடைந்துள்ளன.

மேலும் சென்னையில் கன மழை பெய்து பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, நிவாரணப் பணிகளைமேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரத்து 120 கோடி ரூபாய் தேவை என ஏற்கனவே தங்களுக்குகோரிக்கை வைத்திருந்தேன்.

இதையடுத்து தமிழகத்தில் மழை வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய அதிகாரிகள் குழுவை மத்திய அரசு நியமித்தது.இக்குழுவினர் தமிழகத்துக்கு வருகை தருவதற்குள் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை வந்த மத்திய குழுவினரிடம் 1,120 கோடிக்கு பதிலாக 1,742 கோடி ரூபாய்நிதியுதவி தேவை என வலியுறுத்தினேன்.

இதன்பின் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்று குழுக்களாக பிரிந்து சென்று மத்திய அதிகாரிகள் பார்வையிட்டனர்.மழை வெள்ளத்தால் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்ட மத்தியக்குழுவினர் தமிழகத்துக்கு அதிக நிதி கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர்.

மத்திய குழுவினர் டில்லி புறப்பட்டுச் சென்ற மறுநாளே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பலத்தமழை பெய்யத் துவங்கியது. இம்முறை மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்தது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்துவெளியேற்றப்பட்ட நீரினாலும், கன மழையாலும் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த வாரம் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புஅதிகம்.

ஏற்கனவே கடந்த மாதம் பாதிக்கப்பட்டிருந்த கடலூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 15 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்பது மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் நீர் சூழ்ந்துள்ளது. பஸ், ரயில்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் கிராமப்புறசாலைகள் மற்றும் முக்கிய சாலைகளின் நிலையை கேட்கவே வேண்டாம்.

இதுதவிர, ஏராளமான பாலங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க பல மாதங்கள் ஆகும். இதற்கு அதிகநிதியுதவியும் தேவை. பல இடங்களுக்கு நேரடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதத்தை மதிப்பிட மற்றொருமத்திய குழுவை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வெள்ள நிவாரணப்பணிகளை உடனே மேற்கொள்ள முன்பணமாக ரூ.3000 கோடியை தேசிய இயற்கைச் சீரழிவு நிவாரண நிதியில்இருந்து ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+