ரயில் பாதை சீரமைப்பு: ஆனால் இன்றும் 5 ரயில்கள் ரத்து
சென்னை:
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் 5 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் சின்னம் காரணமாக சமீபத்தில் பலத்த மழை பெய்து தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சிஅருகே காட்டாற்று வெள்ளத்தில் 250 மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது.இதனால் சென்னை-எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி-மதுரை பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாகதென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. திருச்சி அருகேதண்டவாளம் சரி செய்யப்பட்டதால், நேற்று மாலை முதல் தென் மாவட்டங்களிலிருந்து செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் முதல் ரயிலாக கிளம்பி சென்றது. அதை தொடர்ந்து குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ்இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில் தொழில் நுட்ப காரணங்களால் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காட்டூர்-புள்ளம்பாடியிடையே ரயில் தண்டவாளங்கள் இன்னும் சீரமைக்கப்படததால் விருத்தாசலம், விழுப்புரம் வழியாகஇயக்கப்படும் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னைஎழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை சிறப்பு ரயில், தென்காசி-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய 5ரயில்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.
இன்று ரத்தாகும் ரயில்கள்:
இந்நிலையில் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம்சேது எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகூர் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆகிய 5 ரயில்கள் இன்றும்(திங்கட்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதியில் ரத்தாகும் ரயில்:
தாம்பரம்-மயிலாடுதுறை சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் விழப்புரம்-மயிலாடுதுறைக்கு இடையில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications