Uma Vs rest:
டெல்லி:
மத்தியப் பிரதேசத்தில் தனக்கு முதல்வர் பதவி தரப்படாததைக் கண்டித்து அயோத்திக்கு பாத யாத்திரை நடத்த உமா பாரதி முடிவுசெய்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த பெண் சன்யாசி உமா பாரதி, மதக் கலவரம் தொடர்பாக ஹூப்ளி நீதிமன்றம் பிறப்பித்த கைதுவாரண்ட் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். தனக்குப் பதிலாக தனது அடிப்பொடியான பாபுலால் கெளரை அந்தப்பதவியில் அமர வைத்தார்.ஆனால், கெளருக்கு பாஜக தலைவர்களாக பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொம்பு சீவிவிட்டனர். அவரை உமா பாரதிக்கு எதிராகத் திருப்பினர்.
இதையடுத்து உமாவுக்கும் இந்த பாஜக தலைவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. தனக்கு மீண்டும் முதல்வர் பதவியைஉமா கேட்க, அதைத் தர முன் வந்தார் பாஜக தலைவர் அத்வானி. ஆனால், உமா எதிரிகளான ஜேட்லி, நாயுடு, மகாஜன் கோஷ்டிஒன்று சேர்ந்து அதற்கு உலை வைத்தது.
இதனால் இந்த மூவரையும் கண்டித்தும், அவர்களை ஆதரித்த அத்வானியைக் கண்டித்தும் கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தில்நிருபர்கள் முன்னிலையில் பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார் உமா.
இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஆர்எஸ்எஸ், விஎச்பியின் நெருக்கடி காரணமாக மீண்டும் அவரைகட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜக.
இந் நிலையில் முதல்வர் பதவிக்கு மீண்டும் கண் வைத்தார் உமா. தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு முதல்வர் பாபுலாலுக்குஎதிராக கூட்டங்கள் நடத்த வைத்தார். இதன் மூலம் தனது பலத்தை தலைமைக்குக் காட்டினார்.
உமாவை மீண்டும் முதல்வராக்க அத்வானியும் முன் வந்தார். ஆனால், அதை எப்படியாவது முறியடிக்க களமிறங்கியதுஜேட்லி-மகாஜன்-நாயுடு கோஷ்டி.
இந்த மூவரும் சேர்ந்து காய் நகர்த்தி திடீரென உமாவை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக்கினர். அதைத் தொடர்ந்துபாபுலால் கெளரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினர். புதிய முதல்வராக செளகானை நியமித்தனர்.
நேற்று செளகான் முறைப்படி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வைத்துமுதல்வராகத் தேர்வு செய்யவில்லை பாஜக. மாறாக கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடி செளகான் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இருந்து உமாவும் அவரதுஆதரவாளர்கள் 17 பேரும் வெளியேறினர்.
போபாலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செளகான் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்,உமாவின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலக்தை உடைத்து எறிய ஆரம்பித்தனர்.
இதையடுத்து உமாவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் சில நிருபர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனது தோழியில் வீட்டில் இருந்தபடி நிருபர்களிடம் பேசிய உமா, இந்தியாவில் முதன்முறையாக ஒரு முதல்வர்கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது உலக அதிசயத்துக்கு இணையானது. செளகானுக்குஎம்எல்ஏக்களிடையே ஆதரவு இல்லை.
இதனால் தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் நடத்தி அவரைத் தேர்வு செய்யாமல், கட்சித் தலைமை அவரைமுதல்வராக நியமித்துள்ளது.
அரசியல் லாபத்துக்காக ராமரை பலி கொடுத்துவிட்டது பாஜக. நான் கோவில் கட்டும் திட்டத்தை தீவிரமாக்க அயோத்திக்கு பாதயாத்திரை செல்கிறேன் என்றார்.
உமா பாரதியின் இந்தச் செயலை மாஜி பிரதமர் வாஜ்பாய் கடுமையாகக் கண்டித்துள்ளார். கட்சியைவிட தன்னை யாராவதுபெரியவர்களாக நினைத்துக் கொண்டால், அதை ஏற்புடையது அல்ல. உமாவின் செயல் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமானதுஎன்றார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய உமா பாரதி,
நான் கட்சி விரோத செயல் எதிலும் ஈடுபடவில்லை. கட்சித் தலைமை செய்த ஜனநாயகப் படுகொலையைத் தான் கண்டிக்கிறேன்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரமோத் மகாஜன் கட்டுரை எழுதியது கட்சி விரோத செயல் இல்லையா?
பாஜக ஆட்சி நடக்கும் குஜராத், ராஜஸ்தான் அரசுகளுக்கு எதிராக அருண் ஜேட்லி நீதிமன்றத்தில் வாதாடி பணம் சம்பாதித்ததுகட்சி விரோத செயல் இல்லையா?
ஜின்னாவைப் பாராட்டிப் பேசிவிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டாரே அத்வானி, அவரது செயல் கட்சி விரோத செயல்இல்லையா?
நான் தான் உண்மையான பாஜக. என் மீது யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை.
வாஜ்பாய்க்கு ஒரு சின்ன அறிவுரை சொல்ல விரும்புகிறேன். விமானத்தை (பாஜவை) துப்பாக்கி முனையில் சிலர்(அத்வானி-ஜேட்லி-மகாஜன்-நாயுடு) கடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விமானத்துக்கு நீங்கள் பைலட் ஆக விரும்பவேண்டாம்.
செளகானா உமாவா என்பது பிரச்சனையே அல்ல. செளகான் எப்படி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது தான் பிரச்சனை.அவரது பெயரை முன்மொழிந்தபோது 160 எம்எல்ஏக்களில் 100 பேர் அதை எதிர்த்தனர். அதையும் மீறி சிலர் கோஷ்டி சேர்ந்துகொண்டு அவரையே முதல்வராக அறிவித்தது எப்படி சரியாகும். இது தான் பாஜகவின் ஜனநாயகமா?
இது பாஜக சட்ட விதிகளுக்கு மட்டுமல்ல அரசியல் சட்டத்துக்கே புறம்பானது என்றார் உமா பாரதி.
பாஜகவில் ஒருவர் விடாமல் எல்லோரையும் திட்டித் தீர்த்துள்ள உமா பாரதிக்கு விரைவில் கட்டம் கட்டப்படும் என்று தெரிகிறது.பாஜகவில் நடந்த எல்லா விஷயங்களையும் வெளியில் போட்டு உடைக்கும் உமா மீது ஆர்எஸ்எஸ், விஎச்பியும் கூடகடுப்பாகியுள்ளன.
இதனால் உமா பாரதியை கட்சியை விட்டு நீக்குவதில் பாஜகவுக்கு சிக்கல் ஏதும் இருக்காது என்று தெரிகிறது. ஆனால், அதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளில் இறங்குவார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications