உடைந்தது பாலம்: துரைமுருகன் மீது விசாரணை கமிஷன்- ஜெ திட்டம்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

திமுக ஆட்சியில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்கப்படஉள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே கரூரில் புதிதாக ரூ.1 4 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தபாலம் கட்டிய 5 ஆண்டுகளில் தற்போது பெய்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக ஆட்சியின் போது கரூர் அமராவதி ஆற்று கட்டுமான பணி தொடங்கியது. சுமார் 350மீட்டர் நீளம், 58 அடி அகலத்துடன் பாலம் உருவானது. 2000ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பாலம் திறக்கப்பட்டது. கட்டுமானபணியை ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மேற்கொண்டது.

தற்போது பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்தது. 5 ஆண்டிலேயேஇந்த பாலம் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நொறுங்கி விழுந்து உள்ளது.

கரூர் மாவட்டத்தில் வெள்ளச்சேதங்களை பார்வையிட வந்திருந்த முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இடிந்து விழுந்த அமராவதிபாலத்தை பார்வையிட்டார்.

பின்னர் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் இந்த பாலத்தின் ஒரு பகுதி நொறுங்கி விழுந்துஇருப்பதால் கட்டிட வேலை சரியான முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதா? முறையாக பாலம் கட்டப்பட்டதா? என்பது பற்றி ஆராய விசாரணை கமிஷன்அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்க உள்ளது. இந்த பாலம் கட்டியபோது திமுகஆட்சி காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே அவர் மீது விசாரணை கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவோடு நிறுத்துக் கொள்ளாமல் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஒரு கமிஷன் போட்டால் நாட்டுக்குமிகவும் நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+