சிதம்பரத்தில் தொடர்ந்து ஒதுங்கும் உடல்கள்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 4 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அடையாளம் தெரியாத நிலையில் கொள்ளிடக் கரையோரத்தில் 10 பிணங்கள் ஒதுங்கியுள்ளன.

குமராட்சி அருகே வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட திருநாரையூர், வீரநத்தம், எள்ளேரி கிழக்கு, கீழ வன்னியூர், சோழக்கூர்,நடுத்திட்டு, விளத்தூர் ஆகிய வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் 40 பேர் கொண்ட ராணுவ குழுவினர் முழு வீச்சில் மீட்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம் சாலையில் எள்ளேரி கிழக்கு என்ற கிராமத்தின் அருகே சாலையில் சுமார் 100 மீட்டர்நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டதால் அந்த இடத்தில் படகு மூலம் பொது மக்கள் சாலையை கடக்க ராணுவத்தினர் உதவி செய்துவருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த திருநாரையூர், வீரநத்தம், சோழக்கூர், எள்ளேரி கிழக்கு, கீழவன்னியூர் ஆகிய பகுதிகளில் இன்னும் தண்ணீர்வடிய தொடங்காததால் அவர்களுக்கு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுஅவர்களுக்கு போதுமானதாகயில்லை.

இந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர், மண்ணெண்ணெய் கிடைக்காமல்மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் பகுதியில் மேலும் 4 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சிதம்பரம் அருகே உள்ள பிள்ளை முட்டம் பிள்ளைச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் சக்ரவர்த்தி. அவரது மகன் ஹரீஷ்குமார் (வயது19), இவரது உடல் நேற்று மதியம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இவரது உடலை புதைப்பதற்கு இடமில்லாததால் சீர்காழிசாலையில் வைத்து எரித்தனர்.

திருச்சி பொன்மணியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53) இவர் சிதம்பரத்திற்கு தனது அண்ணன் மகள் வீட்டிற்கு வந்த போதுவல்லத்துறை அருகே வெள்ளத்தில் சிக்கி இறந்தார். இவரது உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை. இவரது மகன் வேலு (வயது 24) இவரது உடல்அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட பிணங்கள் சிதம்பரம்கொள்ளிடக்கரையில் ஒதுங்கியுள்ளன.

அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாததால் பிணங்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகின்றன. தொடர்ந்துமீட்புப்பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+