சிறந்த சாப்ட்வேர் உருவாக்கும் மாணவருக்கு தமிழக அரசு விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறந்த சாப்ட்வேரை உருவாக்கும் மாணவருக்கு ஆண்டுதோறும் முதலமைச்சரின் அறிவியல் விருது வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.

இத தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அறிவியல் தமிழ் வளரவும், கணினித் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ப தமிழ் மொழியை வளர்க்கவும் முதல்வர் ஜெயலலிதா ஈடுபாடுகாட்டி வருகிறார். இதற்கேற்ப சிறந்த சாப்ட்வேரை உருவாக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் அறிவியல்தமிழ் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விருது ரூ. 50,000 ரொக்கம், தங்கப் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழ் வளச்சித்துறை மூலம் இந்த விருதுவழங்கப்படும். அத்தோடு விருதுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கு பாராட்டு சான்றிதழ்அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் உருவாக்கும் சாப்ட்வேரைஇந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர்அலவலகங்களில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகங்களிலோ பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அந்த குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+