இன்றிரவு கரை கடைக்கும் புயல்: தொடங்கியது மழை- மீண்டும் வெள்ளக்காடான சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அந்தமான் அருகே உருவான புயல் வட தமிழக கடற்கரையை நெருங்கியதால், சென்னை உள்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்றிரவு முதல் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5 நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்துதமிழக-ஆந்திர கடலோரத்தை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்தப் புயல் இன்றிரவு ஆந்திர மாநிலம் ஓஙகோலுக்கும்சென்னைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் தென் ஆந்திரப் பகுதிகளிலும் புயல் அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டது.

இப்போது தமிழக-ஆந்திரக் கரையில் இருந்து தென் கிழக்கே 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் சின்னம்இப்போது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது இன்று கரையை கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தெற்கு ஆந்திராவிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.

நேற்று முதலே சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இதனால் சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஓடுவதால்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் அபாயம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள்வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பழவேற்காடு கடலோரப் பகுதியில் வசிக்கும் 7,500 மீனவர்கள் வெளியேற்றப்பட்டு பொன்னேரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பங்கஜ் குமார் பன்சல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சென்று 100பஸ்களில் மீனவர்களை அழைத்து வந்து 12 திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

எண்ணூர் கடலோரப் பகுதியில் வசிக்கும் 2,000 மீனவர்கள் வெளியேற்றப்பட்டு மீஞ்சூர் அருகே உள்ள வட சென்னை அனல்மின்நிலைய குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் சின்னமாங்காடு, புதுமாங்காடு பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட்டுஅருகில் உள்ள பள்ளிக்கூடம், சமுதாயக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல் சென்னையை நெருங்கியதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு சென்னையில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்துவிட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

சென்னையில் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. அலையின் சீற்றம் 2வது நாளாக அதிகரித்து காணப்பட்டது. மெரீனாகடற்கரையில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி அருகே அரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

புயல் கரையை கடப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை மழை வேகம் பிடித்து அடை மழையாகபெய்து வருகிறது.

காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்பட பலபகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+