ஏர்-இந்தியாவின் துபாய் விமானத்தில் தீப்பொறி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் - சென்னை:

திருவனம்தபுரத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீப் பொறி பறந்ததையடுத்து அந்த விமானம் மீண்டும்அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது.

129 பயணிகள், 10 விமாந சிப்பந்திகளுடன் இன்று காலை அந்த விமானம் புறப்பட்டது. கிளம்பிய சில நிமிடங்களில்விமானிகளின் அறையில் தீப் பொறி ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை மீண்டும் திருவனந்தபுரத்துக்கே திருப்பினன்விமானி.

விமான நிலையம் எமெர்ஜென்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. அவசரமாகத் தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்துபயணிகள் அவசர வழியின் மூலம் வெளியேற்றப்பட்டனர். அப்போது அலறிக் கொண்டு விமானிகள் வெளியேறினர். இதனால்ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து வளைகுடா செல்லும் பிறவிமானங்களும் தாமதமாகின.

சென்னை-குவைத் விமானத்தில் கோளாறு:

அதே போல சென்னையிலிருந்து குவைத் புறப்படவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும்இறக்கிவிடப்பட்டனர்.

இன்று காலை 9.55 மணிக்குப் புறப்படவிருந்த குவைத் ஏர்வேஸ் விமானத்தில் 172 பயணிகள் ஏறி அமர்ந்தனர். இந் நிலையில்விமானத்தில் கோளாறு இருப்பதை அறிந்த விமானி, பயணிகள் அனைவரையும் உடனடியாக இறங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அனைத்துப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின் விமானம் தாமதமாகக் கிளம்பும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+