பாஜகவில் இருந்து உமாபாரதி டிஸ்மிஸ்: புதுக்கட்சி தொடங்க முடிவு
டெல்லி:
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக உறுப்பினருமான உமாபாரதி பாரதிய ஜனதா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவர் புதிய கட்சியை தொடங்கவுள்ளார்.
பாஜகவின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர் உமாபாரதி. இவரது தீவிர பிரசாரத்தினால் தான் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாஆட்சியை பிடித்தது. ஹூப்ளி வழக்கில் பதவி இழந்த அவர் பாபுலால் கவுருக்கு பதிலாக மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்கவிரும்பினார்.இதை ஏற்காத பாஜக மேலிடம் சிவராஜ்சிங் சவுகானை முதலமைச்சராக அறிவித்தது. அதில் அதிருப்தி அடைந்த உமாபாரதி புதியமுதலமைச்சர் தேர்வு கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போபாலில் இருந்து அயோத்தி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம் உமாபாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, டிஸ்மிஸ்செய்தது. மேலும் அவருக்கு ஆதரவு அளித்த 13 எம்எல்ஏக்கள் மீதும் பாஜக நடவடிக்கை எடுக்க உள்ளது.
கட்சியில் இருந்து தன்னை நீக்கியதால் உமா பாரதி அதிருப்தி அடைந்துள்ளார். தனது ஆதரவாளர்களின் நலனை மனதில்கொண்டு புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து தனக்கு ஆதரவு அளிக்கும் மூத்த தலைவர்களிடம் அவர்ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
இது குறித்து உமாபாரதி கூறியதாவது:
நான் விரையில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராம்நாயக்கை சந்தித்து பேசுவேன். அப்போது என்னை டிஸ்மிஸ் செய்ததுசெல்லாது என்று அறிவிக்கும் படி வற்புறுத்துவேன். கட்சியில் தலைவரை விட ஒழுங்கு கமிட்டியே மேலானது.
ஜின்னாவுக்கு புகழாரம் சூட்டியதன் மூலம் கட்சிக் கட்டுப்பாட்டை அத்வானி மீறியுள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்கவற்புறுத்துவேன். என் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். நான் ஏன் கட்சியை விட்டு விலக வேண்டும். எனதுகோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் புதுக்கட்சி தொடங்குவேன் என்று கூறினார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications