சிரிப்பாய் சிரிக்கும் சென்னை சாலைகள்
சென்னை:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு முக்கியசாலைகள் குண்டும், குழியுமாக மாறி வாகனங்களை பதம் பார்த்து வருகின்றன.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் இந்த நிமிடம் வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து கன மழை பெய்து சென்னைமாநகரை, மாபெரும் நரகமாக மாற்றியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காணப்படுகிறது.நகரின் பல்வேறு பகுதிகள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இந்த தொடர் மழை காரணமாக, சென்னை நகரின் முக்கியச்சாலைகள் படு மோசமான நிலைக்கு மாறியுள்ளன. குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம்,சோழிங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகள் கற் குவியலாக மாறியுள்ளன.
இருபக்கம் தேங்கிக் கிடக்கும் மழை நீர், நடுவில் சாலை என்ற பெயரில் கொட்டிக் கிடக்கும் கற்கள் என இந்த சாலைகள்மாறியுள்ளன. இந்த சாலையில், பேருந்துகள், லாரிகள் போன்ற பெரிய வாகனங்களே செல்ல முடியாமல் தடுமாறி ஆங்காங்கேபழுதடைந்து நிற்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இரு சக்கர வாகனங்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களை இந்த சாலைகளில்ஓட்டிச் செல்லவே முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியே சமாளித்து கற்குவியல் சாலையில் வாகனங்களை ஓட்டி, நிலை தடுமாறி கீழே விழுவோரின் எண்ணிக்கையும்,பழுதடையும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சிமையம் ஒரு பக்கம் எச்சரிக்கை விடுத்து வருவதால் இந்த சாலைகள் இப்போதைக்கு முழுமையாக சீரமைக்கப்பட மாட்டாதுஎன்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
மழைக்காலம் முடியும் வரை சென்னை நகர சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என்பது மிகப் பெரிய சவாலாகமாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications