பழவேற்காடு ஏரியில் 45 பள்ளி மாணவர்களுடன் கவிழ்ந்த படகு !: அனைவரும் மீட்பு!!
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் 45 பள்ளிக் குழந்தைகள் உள்பட 65 பேர் சென்ற படகு கவிழ்ந்தது. மீனவர்களும்,மற்றவர்களுமாகச் சேர்ந்து குழந்தைகளையும் பிற பயணிகளையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு. இங்கு மிகப் பெரிய ஏரி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ளசின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏரியைக் கடந்து தான்பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.இந்த ஏரியை படகு மூலம் தான் அவர்கள் கடப்பது வழக்கம். இப்போது கன மழை பெய்துள்ளதால் ஏரி முழுவதுமாக நிரம்பிகடல் போல காட்சியளிக்கிறது.
இந் நிலையில் இன்று காலை ஏராளமான மாணவ, மாணவியர் படகு மூலம் பழவேற்காடு ஏரியில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது 40 படகுகளுடன் சென்ற ஒரு படகு பாரம் தாங்காமல் ஏரிக்குள் கவிழ்ந்தது.
தண்ணீரில் விழுந்துத் தத்தளித்த மாணவ, மாணவியரைக் கண்ட மற்ற படகுகளில் இருந்தவர்கள் மற்றும் அப் பகுதி மீனவர்கள்உடனடியாக ஏரிக்குள் குதித்து அனைத்து மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்டு தங்களது படகுகளில் ஏற்றி கரைக்குக்கொண்டு வந்தனர். மேலும் சிலர் தாங்களாவே நீந்தி கரை சேர்ந்தனர்.
தண்ணீரில் மூழ்கியதால் சில மாணவ, மாணவியர் மயங்கினர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அனைத்துமாணவ, மாணவியரும் வீடுகளுக்குத் திரும்பினர்.
இந்தச் சம்பவத்தால் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியைக் கடக்க பாலம் ஒன்றைக் கட்டித் தர அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications