பாஜகவுக்கு பணிந்த காங்: நட்வர் ராஜினாமா
டெல்லி:
இராக் எண்ணெய் பேர ஊழலில் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் நட்வர் சிங் நேற்றிரவு ராஜினாமாசெய்தார்.
இந்த விவகாரத்தால் அவரிடம் இருந்து வெளியுறவுத்துறை பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டார்நட்வர். இந் நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் பாஜக பெரும் அமளியில் இறங்கியது.இதையடுத்து நேற்று காலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் நட்வர் சிங். அப்போது அவரிடம், ராஜினாமாசெய்யுமாறு கேட்டுக் கொண்டார் சோனியா. ஆனால், அதை ஏற்க சிங் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.இதையடுத்து நேற்றிரவு மீண்டும் சோனியா காந்தியை சந்தித்த நட்வர் சிங், அடுத்த சில மணி நேரத்தில் தனது ராஜினாமாவைஅறிவித்தார்.
அதே நேரத்தில் தான் நிரபராதி என்றும் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றம் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டுமானால், நட்வர் சிங்கின் ராஜினாமாவை மத்திய அரசுபெற வேண்டும் என பாஜக கோரியது. பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக இந்தத் தகவலை பாஜக நாடாளுமன்றத்துணைத் தலைவர் மல்ஹோத்ரா காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பினார்.
இதையடுத்து நட்வரை பலி கொடுக்க முன் வந்தது காங்கிரஸ் தலைமை.
இந் நிலையில் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தியும் ராஜினாமா செய்ய வேண்டும் பாஜகதலைவர்களின் ஒருவரான அருண் ஜேட்லி கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ், இந்தக் கோரிக்கைக்காகபாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications