தேர்தல் வருது... ரோடும் வருது...
சென்னை:
தமிழகத்தில் சாலைகள், பாலங்களை மேம்படுத்த ரூ.130.33 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையாவது:தமிழ்நாட்டில் பெரிய மாவட்ட சாலைகள், இதர மாவட்ட சாலைகள், தார் சாலைகள் ஆகியவற்றை 130.33 கோடி ரூபாய்மதிப்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்திட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் படி கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு பாலங்கள் கட்டவும், சென்னையை தவிர தமிழ்நாட்டில்உள்ள ஏனைய 29 மாவட்டங்களில் 339 பெரிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை மொத்தம் 1189 கி.மீநீளத்திற்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் 109.76 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தவும் மேம்படுத்தவும் நான்ஆணையிட்டுள்ளேன்.
மேலும் கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர்,திருவாரூர், வேலூர், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் 171 கிமீ நீளமுள்ள 56 சாலைகளை நபார்டுவங்கி நிதி உதவியுடன், 20.57 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தவும், அகலப்படுத்தவும் நான் உத்தவிட்டுள்ளேன்.
இந்தப் பணிகள் அனைத்தையும் விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நான் தக்கஆணைகள் பிறப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications