கஞ்சா வேட்டை: போலீஸ்- மக்கள் அடிதடி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே கஞ்சா வேட்டையின்போது போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் உள்பட 13 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த போலீசார் ரவி, சின்னசாமி, ராஜமாணிக்கம், கோவிந்தராஜ், செல்லூரை சேர்ந்தபோலீஸ் உளவாளி கருப்பையா ஆகியோர் திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்து உள்ள வள்ளிவேலன்பட்டியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கு வேட்டைக்கு சென்றனர்.

அங்கு அய்யாசாமி என்பவரை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்ய முயன்ற போது அய்யாசாமி அதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த கண்ணன், சோனை ஆகியோரும் போலீசாருடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோபமடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் அடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதனால் கொதித்துப் போன கிராமமக்கள் ஒன்று திரண்டு போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த வாதம் முற்றி போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.

இதில் பொதுமக்கள் வேட்டைக்கு வந்த 4 போலீசாரையும் சரமாரியாக தாக்கியதோடு, போலீஸ் உளவாளி கருப்பையா, ஜீப்டிரைவர் கருப்பசாமி ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இருந்தாலும் கைது செய்த 3 பேரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

இதனால் அந்த ஊரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பேரையூர் டிஎஸ்பி வேணுகோபால், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும்போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 4 பேர் மற்றும் அவர்களைதாக்கிய 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

போதை தடுப்பு பிரிவு போலீசார் தங்களை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் வன்னிவேலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தகண்ணன், வீரணன், சோனை, காரல்மார்க்ஸ், அய்யாசாமி, இன்னொரு கண்ணன், சங்கரன், சமயன், டிரைவர் மகுடபதி ஆகிய 9பேரை கைது செய்தனர்.

இதே போன்று வன்னிவேலாம்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் கிராம மக்களைதாக்கியதாக சின்னசாமி, ராஜமாணிக்கம், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 போலீசாரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம்தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+