நியூயார்க் விமானத்தில் மப்பு பார்ட்டி ரகளை
சென்னை:
சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த விமானத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த பயணியை அதிகாரிகள் இறக்கிவிட்டனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் நியூயார்க் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். 65 வயதாகும்அவர் குடித்து விட்டு முழு மப்பில் தான் விமான நலையத்திற்கு வந்திருந்தார்.நியூயார்க் விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். விமானம் கிளம்பும் முன்பு, அனைவரும் தங்களதுபெல்ட்டை அணியுமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாத அங்கப்பன், தனது இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
சரக்கு உள்ளே போனதும், குடிபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்ய ஆரம்பித்தார்.
இதையடுத்து விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமானி தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து சென்று அங்கப்பனை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன் பின்னர் விமானம் நியூயார்க் புறப்பட்டுச்சென்றது.
குடிபோதையால் ரகளை செய்து இறக்கி விடப்பட்ட அங்கப்பன் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து தனக்குத்தானேபுலம்பிக் கொண்டிருந்தார்.
குடிப்பது எனது பிறப்புரிமை, அது குற்றமா, யார் தடுத்தாலும் நான் குடிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்த அவரைபாதுகாவலர்கள் அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். அங்கப்பன் செய்த அலம்பலால் நியூயார்க் விமானம் ஒரு மணி நேரம்தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications