தமிழகத்துக்கு முக்கியத்துவம்: பில் கேட்ஸ் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Bill Gates and Jayalalitha

இந்தியாவில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்கும்போது சென்னைக்கே முதலிடம் தரப்படும் என மைக்ரோசாப்ட்நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தபோது இந்த உறுதிமொழியைத் தந்தார்.

நேற்று சென்னை வந்த கேட்ஸ், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். சுமார் 20நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநதி மாறனும் உடனிருந்தார்.

அப்போது தான் எழுதிய குறளோவியம் நூலின் ஆங்கிலப் பதிப்பின் பிரதியை கேட்சிடம் கருணாநிதி வழங்கினார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கம்ப்யூட்டர்,சாப்ட்வேர் தொழில்களில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்சிடம் கேட்டுக் கொண்டேன். இதுகுறித்து பரிசீலிப்பதாகச் சொன்னார்.

திமுக ஆட்சி காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்ஸிடம்விளக்கினேன்.

திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் கேட்ஸிடம் சொன்னபோது அவர் ஆச்சரியமடைந்தார். எனது குறளோவியம்நூலின் ஆங்கிலப் பதிப்பின் பிரதியையும் அவரிடம் கொடுத்தேன் என்றார் கருணாநிதி.

உடனிருந்த தயாநிதி மாறன் கூறுகையில், பெங்களூரில் சாப்ட்வேர் தொழில்நுட்பத் துறையினர் தற்போது மிகப் பெரும்கஷ்டத்தில் உள்ளனர். அடிப்படைக் கட்டமைப்பு, நல்ல சாலைகள் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அந்த நிலை சென்னையிலும் வந்துவிடாமல் தடுக்க முன்னேற்பாட்டுடன் தமிழக அரசுநடந்து கொள்ள முயல வேண்டும்.

இந்த ஆட்சியில் சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மிக மோசமாகிவிட்டது. நல்ல சாலைகள் கூட இல்லை.

இப்போது கூட, டைடல் பார்க்குக்கு பில் கேட்ஸை அழைத்துச் செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அப் பகுதியில் உள்ளசாலை மிகவும் மோசமாக இருப்பதால் கேட்ஸை அழைத்துச் செல்ல முடியவில்லை. இன்னும் அந்த ரோடைக் கூட சரிசெய்யவில்லை. சாலை வசதிகளில் தமிழக அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

கேட்ஸ் இதற்கு முன்பு பலமுறை இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட அவர் சென்னை வந்ததில்லை. இப்போதுஎனது முயற்சியால்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார் என்றார் மாறன்.

இந் நிலையில் இன்று காலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகளுடன் கேட்ஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின்போது தயாநிதி மாறனும் உடனிருந்தார்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை தனது மனைவி மெலின்டாவுடன் கோட்டையில் சந்தித்துப் பேசினார் கேட்ஸ். அப்போதுதமிழகத்தில் மைக்ரோசாப்ட் தொடங்கும் திட்டங்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க அரசு தயாராக இருப்பதாகஜெயலலிதா தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விரிவாக்கத் தேவையான நிலம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதாகவும்ஜெயலலிதா உறுதியளித்தார்.

அப்போது பேசிய கேட்ஸ், தமிழகத்தில் மிகச் சிறந்த கம்யூட்டர் நிபுணர்கள் உள்ளதாகவும், சாப்ட்வேர் துறையில் தமிழகத்தின்மனித வள ஆற்றல் ஆச்சரியம் தருவதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் அடிப்படை வசதிகள் அருமையாக உள்ளதாகக்கூறிய கேட்ஸ், இந்தியாவில் தனது நிறுவனத்தை விரிவாக்கும்போது தமிழகத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றார்.

இதையடுத்து தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் மைக்ரோசாப்ட் திட்டத்தை பில் கேட்சும்ஜெயலலிதாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+