த ரைசிங் சன்: திமுகவின் புதிய பத்திரிக்கை
சென்னை:
திமுகவின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழான முரசொலியைப் போல, அதிகாரப்பூர்வ வார ஏடாக தி ரைசிங் சன் என்றபத்திரிக்கையை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் வெளியிட்டார்.
முரசொலி மாறனால் ஆரம்பிக்கப்பட்டது முரசொலி நாளிதழ். இது திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக உள்ளது. திமுகவின்தமிழ்ப் பிரச்சார பீரங்கியாக திகழும் முரசொலியைப் போல ஆங்கிலத்திலும் ஒரு வார இதழை கொண்டு வர முரசொலி மாறன்முடிவு செய்து தி ரைசிங் சன் என்ற பெயரில் ஆங்கில வார ஏட்டை முன்பு ஆரம்பித்தார்.ஆனால் அது சரியான வரவேற்பு இல்லாததால் பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் த ரை சிங் சன் வார இதழை மீண்டும் கொண்டு வந்துள்ளது திமுக.
இதன் தொடக்க விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கருணாநிதி கலந்து கொண்டு ரைசிங் சன் வார இதழின் முதல்பிரதியை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுகவின் நிகழ்வுகளை, கருத்துக்களை வெளி மாநிலங்களில் இருப்போரிடம் கொண்டு சேர்க்கும் பணியை ரைசிங்சன் மேற்கொள்ளும் என்று கருணாநிதி அப்போது தெரிவித்தார்.
இந்தப் பத்திரிக்கைக்கு தலா 100 சந்தாக்களைப் பிடித்துத் தர வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச்செயலாளர்கள், முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். சில ஆண்டுகளுக்கான இந்தச் சந்தாவின் மதிப்பு ரூ. 7,500.இதனால் கழக உடன்பிறப்புக்கள் கையைப் பிசைந்தபடி முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications