லஞ்சம் வாங்கி மாட்டிய 11 எம்பிக்கள்!: நாடாளுமன்றத்துக்குள் நுழைய தடை!!
டெல்லி:
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய 11 எம்பிக்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். இதில் 6 பேர் பாஜகஎம்பிக்கள், 3 பேர் பகுஜன் சமாஜ் எம்பிக்கள், ஒருவர் காங்கிரஸ் எம்பியாவார்.
முன்னாள் தெகல்கா நிருபரும் இப்போது கோப்ரா போஸ்ட் என்ற இணையத் தளத்தை நடத்தி வருபவருமான அனிருத் பெகல்மற்றும் அவருடைய நிருபர் குழுவினர் இந்த எம்பிக்களை கேமராவில் கையும் களவுமாகப் பிடித்தனர்.இந்த வீடியோ காட்சிகளை இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே- ஆஜ்தக் டிவி தொலைக்காட்சிகள் இன்று ஒளிபரப்பின.
தாங்கள் வட இந்திய சிறு தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு இந்த எம்பிக்களை கோப்ரா போஸ்ட்நிருபர்கள் அணுகினர்.
தாங்கள் சிறு தொழில் துறைக்கான ஒரு கூட்டமைப்பை நடத்துவதாகவும் தங்களது துறைக்கு அதிக சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் கூறிக்கொண்டு எம்பிக்களிடம் இவர்கள் தனித்தனியே பேசினர்.
காசு கொடுத்தால் நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் எழுப்ப தாங்கள் தயார் என இந்த எம்பிக்கள் கூறினர்.கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை இந்த எம்பிக்களை இந்த நிருபர்கள் நேரடியாகவும், எம்பிக்களின் உதவியாளர்கள் மூலமும்பல முறை சந்தித்துப் பேசினர்.
ஒவ்வொரு சந்திப்பின்போதும் எம்பிக்களுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 70,000 வரை வழங்கினர். அதை எம்பிக்கள் வாயைப் பிளந்துகொண்டு வாங்கியதை அப்படியே ரகசிய கேமராக்களில் பதிவு செய்தனர். மேலும் எம்பிக்களுடன் பேரம் நடத்தியதையும்அவர்கள் படம் பிடித்தனர்.
எம்பிக்களின் உதவியாளர்கள், இடைத் தரகர்கள் ஆகியோரும் இந்த நிருபர்களிடம் பணம் வாங்கினர். இவையனைத்தையும்கேமராவில் பதிவு செய்த கோப்ரா போஸ்ட் குழுவினர் அதை இன்று ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைக்காட்சியில்வெளியிட்டனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த அன்னா பாட்டீல் (மகாராஷ்டிரா) மகாஜன் (மகாராஷ்டிரா), பிரதீப் காந்தி (சட்டீஸ்கர்), சுரேஷ் சந்தல்(இமாச்சல் பிரதேசம்), சந்த்ரபிரதாப் சிங், சத்ரபால் சிங் (ஒரிஸ்ஸா-ராஜ்யசபா உறுப்பினர்).
காங்கிரஸைச் சேர்ந்த ராம் சேவக் சிங் (ராஜஸ்தான்), ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (ஜார்க்கண்ட்),
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நரேந்திர குமார் (உத்தரப் பிரதேசம்), லால் சந்திரா (உ.பி), ராஜா ராம்பால் (உபி) ஆகியோர்உள்பட 11 பேர் சிக்கினர்.
இன்று நாடாளுமன்றம் கூடியதும் இடதுசாரிக் கட்சி எம்பிக்கள் இந்த விவகாரத்தைக் கிளப்பினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, விசாரணைமுடியும் வரை இந்த எம்பிக்கள் அவைக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இது தொடர்பாக அந்த எம்பிக்களிடம் நான்விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவேன் என்றார்.
இதற்கிடையே, லஞ்சம் வாங்கிய 6 எம்பிக்களையும் கட்சியிலிருந்து பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள்டிவியில் வெளியான சில மணி நேரங்களில் மாஜி பிரதமர் வாஜ்பாயுடன் மாஜி துணைப் பிரதமர் அத்வானி ஆலோசனைநடத்தினார். இதையடுத்து இந்த 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து கட்சி உத்தரவு பிறப்பித்தது.
அதே போல தங்களது கட்சியைச் சேர்ந்த ராம்சேவக் சிங்கையும் அந்தக் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications