அமராவதி ஆற்றில் திடீர் வெள்ளம்: பக்தர்களை வளைத்த நீர்- மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்ட 35 பேரை தீயணைப்புப்படையினர் சுமார் 7 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாலாறு என்ற சிறிய ஆறு உள்ளது. அமராவதியின் கிளை ஆறாகும் இது. இந்த ஆற்றின்நடுவே ஆஞ்சனேயர் கோவில் உள்ளது.இந்தக் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, பாலாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் பீதியடைந்தனர். அவர்களைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர் திடீரெனகோவிலுக்குள்ளும் புகத் தொடங்கியது. இதையடுத்து அனைவரும் உதவி கேட்டு குரல் எழுப்பினர். இதுகுறித்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் போனது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும், பொதுமக்களும் கோவிலுக்குள் சிக்கிக் கொண்ட 35 பேரை கயிறு கட்டி பத்திரமாகமீட்டனர். சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே உடுமலைப் பேட்டை அருகே கொம்மனூத்துத் தூறை என்ற இடத்தில் 4 பேர் பாலாற்றின் காட்டாற்று வெள்ளத்தில்சிக்கிக் கொண்டனர். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மீட்டது.












Click it and Unblock the Notifications