முகம்மது அலி மீது சிபிஐ குற்ற பத்திரிக்கை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 11 பேர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கியப் புள்ளிகளும் சிக்கினர்.சிபிசிஐடி பிரிவு டிஐஜி முகம்மது அலி, டிஎஸ்பி சங்கர், மதுரை எல்.ஐ.சி அதிகாரி சாஹு உள்ளிட்டோர் பிடிபட்டனர்.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. இந் நிலையில், முகம்மது அலி ஐ.பி.எஸ்.அதிகாரி என்பதால் அவர் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி தேவை என்பதால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் சிபிஐ காத்து வந்தது.
இந் நிலையில், நேற்று கம்மது அலி மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முகம்மது அலி, சங்கர், சாஹு, அப்துல் கரீம் தெல்கி, நிஜாமுதீன், அவரது மனைவி தஸ்லீன் உள்ளிட்ட 11 பேர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிக்கையை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஏற்றுக் கொண்டார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக முகம்மது அலி மீது கூடுதலாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டு, தனியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 3,000 பக்கங்களைக் கொண்டதாக இந்தக் குற்றப் பத்திரிக்கை உள்ளது. 190 சாட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.340 ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications