சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அரசு நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை: ரூ. 100 கோடி லஞ்ச!!
சென்னை:
சென்னையில் ரூ. 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வெறும் ரூ. 15 கோடிக்குவிற்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் சுர்ஜித் சிங்கிடம் அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அக் கட்சியினர் பர்னாலாவை சந்தித்தனர்.
அப்போது முதலமைச்சர் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு, ரூ. 25 லட்சம் தொகையை ஆளுனரிடம் அவர்கள் கொடுத்தனர்.வழக்கமாக இந்த நிதி முதல்வரிடம் தான் தரப்படும். சுனாமி நிவாரண நிதியைக் கூட முதல்வரிடம் தான் ஸ்டாலின் மூலமாக திமுககொடுத்தது.
ஆனால், வெள்ள நிவாரண நிதியை கொடுக்கப் போன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமைச் செயலகத்தில்அலைகழிக்கப்பட்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் யாரும் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி தரவில்லை.
இந் நிலையில் பர்னாலாவிடம் நிதியையும் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் திமுக தலைவர்கள் வழங்கினர்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆளுனரிடம் அன்பழகன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ. 200 கோடிமதிப்புள்ள அரசு நிலம் வெறும் ரூ. 15 கோடிக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் பன்னாட்டுநிறுவனத்திற்கு அரசு விற்றுள்ளது.
இந்த அடிமாட்டு விலைக்காக ரூ. 50 முதல் 100 கோடி வரை பேரம் நடந்து கமிஷன் கை மாறியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 100கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications