போலி எப்.ஐ.ஆர்: சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு
சென்னை:
தமிழகத்தை உலுக்கி வரும் போலி எப்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
போலி எப்.ஐ.ஆர் விவகாரம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போலி எப்.ஐ.ஆரைப் பயன்படுத்தி போலீசார் காசு சம்பாதித்ததுஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் போலீஸ் உதவியுடன் போலி எப்ஐஆர்களைத் தாக்கல் செய்து வண்டிகள் காணாமல்போய்விட்டதாக பொய்த் தகவல் தந்து இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் பலர் ஏமாற்றியுள்ளனர்.இந் நிலையில், ரவி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி பொது நல வழக்கு போட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போலி எப்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இதுவரை சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆனால் அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடபோலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
பல காவல் நிலையங்களில் இன்னும் கூட போலி எப்.ஐ.ஆர். புத்தகங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. முற்றிலும் தமிழககாவல்துறை சம்பந்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை தமிழக காவல்துறையினரே விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபி மெத்தனமாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீதும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உளவுப் பிரிவினர் காவல் நிலையங்களில் அதிரடியாக சோதனை நடத்திவிட்டு, போலீசுக்கு போலி எப்ஐஆர்அச்சடித்துத் தந்த சேகர் என்பவனைக் கைது செய்தததோடு அப்படியே நின்றுவிட்டனர்.
போலி எப்ஐஆரைப் பயன்படுத்தி காசு தேத்திய போலீசார் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில்உண்மையிலேயே நேர்மையான விசாரணை நடத்தினால் சுமார் 100 காவல் நிலையங்களின் எஸ்ஐகளில் ஆரம்பித்து ஏட்டு,போலீஸ் வரை நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
ஆனால், காக்கிகள் துணையோடு அரசாங்கம் நடத்தும் இந்த அரசு அந்த நடவடிக்கையை எடுக்குமா என்பது சந்தேகமே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications