சதுர்வேதி சாமியார் விடுதலை: போலீஸ் மீது பரபரப்பு புகார்
சென்னை:
![]() |
குண்டர் சட்டத்தின் கீழ் சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து,அவர் இன்று சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை தி.நகரில் தொழிலதிபர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சதுர்வேதி. இந்தநிலையில் சுரேஷின் மனைவி மற்றும் இளவயது மகளை ஹைதராபாத்துக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகஅவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து சதுர்வேதியை போலீஸார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.
அவர் மீது குண்டர் சட்டம் உள்பட மொத்தம் 7 வழக்குகள் போட்டுக் கைது செய்தனர். இதில் 6 வழக்குகளில் சதுர்வேதி ஜாமீன்பெற்று விட்டார். ஆனால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்ததால் அவரால் விடுதலை ஆக முடியவில்லை.
இந் நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தது செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுசெய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சதுர்வேதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்றுநேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து சதுர்வேதி இன்று காலை சென்னை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்த சதுர்வேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் விடுதலை செய்யப்பட்டது ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும்,மறுபக்கம் பயமாகவும் உள்ளது.
காரணம் ஆபத்தானவர்கள் சிறைக்குள் இல்லை, உள்ளே பாதுகாப்பாக இருந்தேன். ஆனால் வெளியில்தான் மிகவும்ஆபத்தானவர்கள் உள்ளனர். துணை ஆணையர் ராஜேந்திரன் என்னை சுட்டுக் கொன்று விடுவேன் என்று ஏற்கனவேமிரட்டியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.எனவே காவல்துறையால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சுகிறேன். காவல்துறையினர் என் மீது போட்டஅனைத்து பொய் வழக்குகளையும் மனித உரிமை ஆணையத்திற்கு நான் கொண்டு செல்லவுள்ளேன்.
காவல்துறையினர் என் மீது ஆத்திரத்துடன் உள்ளனர். என் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் நான் நிரபராதி என்றுஅறிவிக்கப்படுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் சதுர்வேதி.
சதுர்வேதி மீது ஹோமோ செக்ஸ், பக்தைகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தது உள்பட பல புகார்கல் கூறப்பட்டதுநினைவுகூறத்தக்கது.



Click it and Unblock the Notifications
