200 டிவிக்களோடு லாரி கடத்தல் !
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே 200 டெலிவிஷன் பெட்டிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை நெடுஞ்சாலை கொள்ளை கும்பல்கடத்திச் சென்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி 200 டெலிவிஷன் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கிவந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை கணவாய் பகுதியில் அந்த லாரி வந்துகொண்டிருந்த போது எதிரே ஒரு மர்ம கும்பல் காரில் வந்து வழிமறித்ததுள்ளது.
காரில் இருந்து இறங்கிய கும்பல் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கடுமையாக தாக்கி விட்டு லாரியை கடத்தி சென்றுள்ளது.இதனால் காயமடைந்த டிரைவர் நிலை தடுமாறிய நிலையில் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏறிச் சென்று சூளகிரி போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்ட் சவுந்திரராசன் மேற்பார்வையில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் தனிப்படைஅமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் லாரியை கடுத்தி சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து, அவர்களை கர்நாடகா மற்றும் ஆந்திரமாநிலங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, நாகியம்பட்டி மற்றும் ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிலர்ரூ.5,000க்கு கலர் டிவிக்களை விற்றது தெரிய வந்தது. உடனே அவர்களிடம் விசாரித்த போலீசார் இது தொடர்பாக தம்மம்பட்டிஅதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரின் மகன் செந்தில் (வயது 28), பன்னீர் செல்வம், வளையாபதி ஆகியோரை கைதுசெய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய புள்ளி அயோத்தியா பட்டணத்தைசேர்ந்த வாத்தியார் பாலு என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications