நாடாளுமன்றத்துக்கு மிரட்டல் மெயில்: நெல்லை பிரவுசிங் சென்டர்களில் போலீஸ் அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த இ-மெயில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பப்பட்டதுஉறுதியாகியுள்ளது. இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினர் நெல்லையில் முற்றுகையிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்றுமிரட்டல் மெயில்கள் அனுப்பப்பட்டன.

இன்ஷா அல்லா என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெயிலின் ஐ.பி. அட்ரஸை வைத்து அது நெல்லை பாளையங்கோட்டைமுருகன்குறிச்சியில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள பிராட்பேண்ட் நெட்கபே என்ற பிரவுசிங் சென்டரில் இரந்துஅனுப்பப்பட்டது உறுதியானது.

அதே போல பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானம் எதிரே உள்ள நெல்லை ஆன்லைன் பிரவுசிங் சென்டரிலும்போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து தான் இரண்டாவது மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து நெல்லை சரக டிஐஜி விஜய்குமார், எஸ்பி ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் இரண்டு இன்டர்நெட்சென்டர்களிலும் சோதனை நடத்தினர்.

முதல் சென்டரை நிர்வகிக்கும் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரவுசிங் சென்டருக்கு வந்து போனவர்களின் விவரம்குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த சென்டரில் உள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து நேற்று காலை 9.30 மணி சுமாருக்கு சிபி இணையத் தளத்தின் மெயில்மூலமாக அமெரிக்கத் தூதரகத்துக்கு மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய நபரின் உருவ விவரத்தை சென்டரை நிர்வகிக்கும் பெண் வழங்கினார்.மேலும் இரண்டாவது சென்டரை நிர்வகிக்கும் நபரிடமும் இதே விவரங்கள் திரட்டப்பட்டன.

அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் ஒரு உருவத்தை போலீசார் வரைந்துள்ளனர்.

அந்த நபரின் உருவ அமைப்பு கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகம்மது அலி என்ற தீவிரவாதியின் உருவத்துடன்ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது.

கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களில் முகம்மது அலி உள்ளிட்ட சிலர் நெல்லை மேலப்பாளையத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகம்மது அலிக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பு உண்டு.

நெல்லை, திருச்சியில் கொலை வழக்குகள், சென்னை இந்து முன்னணி அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்த்த வழக்குஆகியவையும் முகம்மது அலி மீது உள்ளன. ஆனால், அலி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறான்.

இந் நிலையில் இரவு 10 மணி வரை இந்த இரு சென்டர்களிலும் சோதனை நடத்திய போலீசாரும், மத்திய உளவுப் பிரிவினரும்பின்னர் அதை சீல் வைத்தனர். அந்த சென்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த இன்டர்நெட் சென்டரை சோதனையிட்ட பின் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்திலும் போலீசார்சோதனையிட்டனர். செல்போன் நெட்வொர்க் மூலமாக மெயில் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த நிறுவனத்தில்சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும் பிராட்பேண்ட் என்ற இன்டர்நெட் சென்டரின் உரிமையாளர்களான செல்வின் மற்றும் முத்துராஜ் ஆகிய 2 பேரைதனியான ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இரண்டு பேரும் டெல்லியில் இருந்து சைபர் கிரைம் ஸ்பெஷலிஸ்டுகள், நெட்வோர்க் ஸ்பெஷலிஸ்டுகள் இன்று மாலைநெல்லைக்கு வரும் வரையில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்படுவர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+