மதுரை: கிரிக்கெட் சண்டையில் வாலிபர் அடித்து கொலை
மதுரை:
மதுரை அருகே கிரிக்கெட் விளையாட மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில்ஒரு அடித்துக் கொல்லப்பட்டார்.
மதுரையை அடுத்து ஆண்டார்கொட்டாரம் கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. இங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் அங்கு வந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.தாங்கள் விளையாட மைதானத்தை தந்துவிட்டு ஒதுங்குமாறு சிறுவர்களிடம் அவர்கள் கூறினர். ஆனால், அதை சிறுவர்கள்கேட்கவில்லை.
இதையடுத்து அந்த வாலிபர்கள் சிறுவர்களை அடித்தனர். இதற்கு அங்கிருந்த பெரியவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப் பகுதியினருக்கும் வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அது கைகலப்பாக மாறியது. அப்போது வாலிபர்களை அப் பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். கிரிக்கெட்மட்டைகள், ஸ்டம்புகளைக் கொண்டு அவர்களை அடித்தனர். இதில் ஒரு வாலிபர் மண்டை உடைந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதனால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் உருவாவதைத் தடுக்க அங்குஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications