பொது மக்கள், திமுக கூட்டணி அமைதி பேரணி
சென்னை:
![]() |
| உறவுகளை பலிகொடுத்து உடைந்து போய் அழும் பெண்கள் |
42 பேரைக் காவு கொடுத்த சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான பொது மக்கள் இன்று மெளன ஊர்வலம் நடத்தி,உயிர்ப்பலி நடந்த மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வெள்ள நிவாரண உதவிகள் பெறச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்த எம்.ஜி.ஆர். நகரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. நேற்றிரவு முழுவதும் உடல் அடக்க நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. இன்றும் பல உடல்கள்அடக்கம் செய்யப்பட்டன.
இந் நிலையில் இன்று காலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஏராளமனார் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம்நடத்தினர். 42 பேர் இறந்த மாநகராட்சிப் பள்ளி வரை ஊர்வலம் சென்றது. பின்னர் பள்ளி மைதானத்தில் அனைவரும் கூடிகண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக கூட்டணி அமைதி பேரணி:
அதே போல திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது.
![]() |
| அந்த பள்ளிக் கூடத்தின் வாசல் |
திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்துஅமைதிப் பேரணி தொடங்கியது. இதில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பங்கேற்றனர்.
பேரணி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு முடிவடைந்தது. சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும்திமுக கூட்டணியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
நேற்று இச் சம்பவத்தைக் கண்டித்து அமைதிப் பேரணி நடத்த முயன்ற ஸ்டாலினுக்கு போலீசார் அனுமதி மறுத்ததுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இன்று சென்னையில் அமைதிப் பேரணியை நடத்தியது திமுக.
நேற்று சேலம், மதுரை உள்பட பல நகர்களில் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 42 பேரின் சாவுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் அமைதிப் பேரணிகள் நடந்தன.
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் திமுக கூட்டணியினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
சென்னையில் பேரணியைத் துவக்கும் முன் பேசிய ஸ்டாலின், நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்குவதில் இந்த அரசுதில்லுமுல்லு செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications