ஆந்திராவில் சென்னை இளம் பெண் படுகொலை
சென்னை:
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள லாட்ஜில் சென்னை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.அவருடன் தங்கியிருந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
அந்திர மாநிலம் ரேணி குண்டா ரெயில்வே புக்கிங் சாலையில் பிரபல ரெட்டி ஓட்டல் என்ற லாட்ஜில் கடந்த 13ம் தேதி ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் கணவன்-மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கினார்கள்.மறுநாள் காலை அறையிலிருந்து வாலிபர் மட்டும் அறைக் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்றார். அவர் திரும்பி வரவில்லை.அறை நீண்ட நேரமாக பூட்டி கிடந்ததால் லாட்ஜ் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் அறைக்கதவை உடைத்து பார்த்தார்.
அந்த அறையில் தங்கியிருந்த இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ரேணி குண்டா போலீசார்சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர் கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும்அவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது.
லாட்ஜில் வந்து தங்கிய போது அந்த வாலிபர் தனது பெயர் ராஜ் என்றும் அந்த பெண்ணின் பெயர் லதா என்றும் மோதியார் தெரு,கடம்பத்தூர், சென்னை-22 என்றும் தவறான முகவரி மற்றும் பெயர்களை குறிப்பிட்டிருந்ததால் இது திட்டமிட்ட கொலை என்பதுஉறுதியாகியது.
கொலை செய்யப்பட்ட பெண்ணும் அந்த வாலிபரும் கள்ளக்காதலர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவேரேணிகுண்டா போலீசார் கொலையுண்ட பெண்ணின் படம் மற்றும் தப்பி ஓடிய கொலைகாரனின் கம்ப்யூட்டர் வரைபடம்ஆகியவற்றை கொண்டு வந்து சென்னை நகர போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த 2 புகைப்படங்களும் சென்னை நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications