ஏ.சி.சண்முகத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை:
கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட மாணவரை மிரட்டிய வழக்கில் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர்ஏ.சி.சண்முகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்களைக் கட்டி வைத்துள்ள ஏ.சி.சண்முகம் இப்போதுபெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஒவ்வொன்றாக இடித்துத் தள்ளப்பட்டுவருகின்றன.அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. பின்னர், கல்விக் கட்டணத்தைத்திருப்பிக் கேட்ட மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சண்முகம், டீன் பவானி சங்கர், தனி அதிகாரியும்சண்முகத்தின் மனைவியுமான கலாவதி ஆகியோர் மீது புதிதாக ஒரு வழக்கை மதுரவாயல் போலீஸார் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குமாறு சண்முகம் உள்ளிட்ட 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், கல்விக் கட்டணத்தை வசூலித்து, வாங்கி அதை முழுமையாகப்பயன்படுத்தியவர் ஏ.சி.சண்முகம்தான். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது.
மற்ற இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பையடுத்து ஏ.சி.சண்முகத்தை கைது செய்யபோலீஸார் மீண்டும் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications