திசை மாறிய மாலா: புயல் ஆபத்து நீங்கியது
சென்னை:
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த மாலா புயல், தற்போது வட கிழக்கு திசை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு ஏற்பட்ட புயல் ஆபத்து நீங்கி விட்டது.
வங்கக் கடலில் உருவான 9வது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான மாலா, புயலாக மாறி கடலூருக்கும், நாகைக்கும் இடையேநிலை கொண்டிருந்தது. இந்தப் புயல் படிப்படியாக நகர்ந்து கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தப் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் இன்றபகாலை (செவ்வாய்க்கிழமை) நிலைமை மாறியது. தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கடலூருக்கு 300 கிலோ மீட்டர்தொலைவை எட்டிய பின் வட கிழக்கில் நகரத் தொடங்கியுள்ளது. இப்போது கடலூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளதுபுயல் சின்னம்.
இந்தப் புயல் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகக் கடலோரப் பகுதிகளுக்குஏற்பட்டிருந்த புயல் ஆபத்து நீங்கி விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த 24 மணிநிேரத்திற்கு கடலோர தமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
புயல் விலகிச் சென்று விட்டதால் கடலோர தமிழக மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications