இ-மெயில் மிரட்டல்: முக்கிய துப்பு கிடைத்தது
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டது தொடர்பாக குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின்செல்போன் எண் கிடைத்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த இன்டர்நெட் மையத்திலிருந்துதான் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில்வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து பாளையங்கோட்டை மற்றும் முருகன்குறிச்சியில் உள்ள பிராட்பேண்ட் இன்டர்நெட் மையம், நிெல்லை ஆன்லைன்இன்டர்நெட் மையங்களைப் பூட்டி போலீஸார் சீல் வைத்தனர்.
இரு மையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்பட 14 பேரை போலீஸார் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். ஆனால்அவர்கள் கொடுத்த தகவல்களில் துப்பு துலங்கவில்லை.
இந் நிலையில் டெல்லியிலிருந்து வந்த இரண்டு தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
அவர்களது விசாரணையிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த 14 பேரும் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 14 பேரில் 13 பேரை தற்போது விடுவித்து விட்டனர்.
அதேசமயம், மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்தில் இருந்தவர்கள் குறித்து அறிந்த ஒரே நபர்அந்த மையத்தின் உரிமையாளர் செல்வின் முத்துக்குமார் மட்டுமே என்பதால் அவரை மட்டும் இன்னும் விடுவிக்காமல் உள்ளனர்.
சம்பவ நாளன்று காலையில் மையத்திற்கு வந்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கம்ப்யூட்டர்உதவியுடன் பல்வேறு முகங்களை போலீஸார் வரைந்து அவரிடம் காட்டினர். அதில் குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தைமுத்துக்குமார் அடையாளம் காட்டியுள்ளார்.
அதை வைத்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இப்போது அவரது செல்போன் எண்ணையும்போலீசார் ட்ரேஸ் செய்துவிட்டனர். அந்த நபர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தற்போது போலீஸார் புது வேகத்துடன்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications