வெள்ள நிவாரணத்தில் முறைகேடு இல்லை: அரசுக்கு விஜயகாந்த் சர்டிபிகேட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சன் டிவி, ஜெயா டிவி ஆகியவை என் செய்திகளை காட்டுவதே இல்லை. அவர்கள் இஷ்டத்திற்குத்தான் நிகழ்ச்சிகளைஒளிபரப்புகிறார்கள் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,

இன்று இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஆளுக்கொரு தொலைக்காட்சியை வைத்துள்ளன. இதில் அவர்களுக்கு சாதகமானநிகழ்ச்சிகளையும், செய்திகளையும்தான் காட்டுகிறார்கள். மக்களுக்குத் தேவையானதை அவர்கள் சொல்வதும் இல்லை,காட்டுவதும் இல்லை.

என்னை இந்த இரு டிவிக்களும் காட்டுவதே இல்லை.

இரு கட்சிகளுக்கும் தனியாக டிவி இருப்பது போல நானும் தனியாக டிவி வைத்தால் என் மீதும் இதே குற்றச்சாட்டுத்தான்நாளைக்கு வரும். நான் எந்தத் தனியார் தொலைக்காட்சியையும் வாங்கவில்லை. ஆனால் ஒரு தொலைக்காட்சியை (தமிழன்?)ஒரு அரசியல் கட்சி வாங்கி விட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நகரில் நடந்த சம்பவம் அனைவருக்கும் நல்ல பாடம். இந்த சம்பவத்திற்காக நான் யாரையும் குறை சொல்லவிரும்பவில்லை. இதைத் தவிர்த்திருக்கலாம். வீடு வீடாக சென்று கொடுத்திருக்கலாம். அல்லது பகுதி வாரியாகப் பிரித்துக்கொடுத்திருக்கலாம்.

இந்தத் துயர சம்பவத்தை இரு பெரிய அரசியல் கட்சிகளும் மாறி மாறி அரசியலாக்கி வருகின்றன. அடுத்து என்ன செய்யலாம்என்பது குறித்து யோசிக்காமல் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு பயனும் கிடையாது.

எனக்குத் தெரிந்தவரை வெள்ள நிவாரண நிதியை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பெற்றிருப்பதாக அறிகிறேன்.ஆளும் கட்சியினர் இதை முறைகேடு செய்திருப்பதாக எனக்குத் தெரிந்து தகவல் இல்லை.

எனது கட்சியில் இருப்பவர் அனைவரும் புதுமுகங்களே. எங்களது முக்கிய லட்சியமே வேலையில்லாத் திண்டாட்டம்,லஞ்சத்தை ஒழிப்பதுதான்.

காலம் காலமாக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே நமது மக்கள் ஓட்டுப் போட்டு வந்துள்ளார்கள். அதனால் அவர்களுக்கு என்னலாபம் கிடைத்து விட்டது? ஒன்றும் இல்லை. எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்றுதான் மக்களிடம்சொல்லி வருகிறேன்.

நாங்கள் நிச்சயமாக தனித்துத்தான் போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி கிடையாது. எங்களைப் போல மற்ற கட்சிகளும்தனித்து நிற்கட்டும்.அப்போதுதான் யாருக்கு பலம் உள்ளது என்பது தெரிய வரும்.எங்களுக்குத் தைரியம் உள்ளது. மற்றகட்சிகளுக்கு அது இருக்கிறதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அப்படித் துணிந்து தனித்து நின்றால் யார் ஃபுல், யார் நில் என்பது தெரிந்து விடப் போகிறது. தங்களுக்கு இங்கே செல்வாக்குஇருக்கிறது, அங்கே செல்வாக்கு இருக்கிறது, இது எங்களது கோட்டை என்று கூறும் கட்சிகள் இந்தத் தேர்தலில் அதை தனித்துநின்று நிரூபித்துக் காட்டட்டுமே?

நான் என்னால் முடிந்ததைத்தான் மக்களிடம் சொல்வேன். சினிமாவில் சொன்னதை நான் அப்படியே நிறைவேற்றுவேன்.

மற்ற கட்சிகளுக்கு இருப்பது போல எங்களுக்கும் பத்திரிக்கைகள் உள்ளன. ஒன்றுக்கு இரண்டாக நமது விஜயகாந்த், அன்புவிஜயகாந்த் என இரு பத்திரிக்கைகள் உள்ளன. இவற்றை எனது கட்சிக்காரர்கள்தான் படிப்பார்கள். எனவே மற்றபத்திரிகைகளும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+