பின்லேடனை பாராட்டி மெயில்: 2 கேரள மாணவர்களிடம் விசாரணை
மலப்புரம்:
ஒசாமா பின் லேடன் வாழ்க என்று இணையதளம் மூலம் மெயில் அனுப்பிய கேரளாவைச் சேர்ந்த இரு மாணவர்களிடம் போலீசார்விசாரணை நடத்தினர்.
நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து இமெயில் வந்த இணையத் தளத்தை மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக போலீசாரும்உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந் நிலையில் அந்த இணைய தளத்தில் இருந்து மேலும் ஒரு மெயில் வந்திருப்பதைகவனித்தனர். இந்த இ-மெயிலில் பின் லேடன் வாழ்க என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மெயிலை மலப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் வாண்டூரை சேர்ந்த அயூப் கான், மற்றும் பந்திக்காடுவை சேர்ந்தஅப்துல் பாஷித் ஆகிய 2 மாணவர்களும் இன்ஷாஅல்லா என்ற சிபி இணையதள முகவரிக்கு இ-மெயில் அனுப்பி உள்ளனர்.இதில் லேடனைப் பாராட்டியதோடு, சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்தும்குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மெயிலுடன் நாடாளுமன்ற படமும், சென்னை விமான நிலையத்தின் படமும் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. இந்தமெயில் கேரள மாநிலம் பந்திக்காடு பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று அறிந்த போலீசார் கேரள போலீசாருக்குதகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தமிழக போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் கேரளா விரைந்தனர். இந்த நிலையில் அந்த மெயில் அனுப்பிய 2மாணவர்களும் கேரள போலீசாரிடம் பிடிபட்டனர்.
அங்கு சென்ற தமிழக போலீசாரும் அந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக இந்த மெயிலை அனுப்பியுள்ளது தெரிந்தது. எந்த கெட்ட நோக்கத்தோடும்இந்த மெயில் அனுப்பப்படவில்லை என உறுதியானது.
இதனால் மாணவர்கள் 2 பேருக்கும் போலீசார் இது போன்ற விபரீத விளையாட்டுகளில் இனி ஈடுபட வேண்டாம் என்று அறிவுரைகூறி விடுவித்து அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications