திமுக கவுன்சிலர் மீது பொய் வழக்கு: ராமதாஸ்
சென்னை:
வெள்ள நிவாரண முகாமில் வதந்திகளை பரப்பியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணம் வாங்க வேண்டி திரண்டிருந்த கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 42 பேர்உயிரிழந்ததற்கு அரசின் குளறுபடிகளும், அவசர நடவடிக்கையே காரணம். ஆனால் யாரோ பரப்பிய வதந்தி தான் காரணம் என்றகற்பனையில் அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
இந்த சம்பவத்துக்கு துளிகூட சம்பந்தமில்லாத திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர் மீது வழக்குதொடர முயற்சி மேற்கொண்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கது.
கைது செய்யப்பட்டுள்ள திமுக கவுன்சிலரை உடனடியாக விடுதலை செய்து அவர் மீதான குற்றச்சாட்டு மற்றும் வழக்குகளை அரசுஉடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
நடந்து விட்ட உயிர்பலிக்கு காரணம் என்னவென்று நாடே அறியும். அனைத்து கட்சி குழுக்களை அமைத்து வெள்ள நிவாரணஉதவிகளை முறையாக வழங்க வேண்டும் என்று எதிர் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, அரசியல் ஆதாயத்தோடுமுன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் அவசர கோலத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய அரசின் குளறுபடிகள் தான்அனைத்திற்கும் காரணம்.
நிர்வாக குளறுபடியால் தான் மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மேல் என்ன காரணம் என்பதை கண்டறியவிசாரணை கமிஷனையும் அரசு அமைத்திருக்கிறது. கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பாகவே பொய் வழக்கு போடுவது, கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications