நக்கீரன் கோபாலுக்கு பெரியார் விருது
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் பற்றிய விவகாரங்களை வெளியிட வேண்டாமென என்னை தடுத்தார்கள் என்று நக்கீரன் கோபால்கூறினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் 32வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில்நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பெரியார் விருதை திக தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசியதாவது:
சங்கரராமன் கொலை விவகாரம் பற்றி எழுதியபோது எங்குமே சங்கராச்சாரியார் தான் குற்றவாளி என்று நாங்கள்சொல்லவில்லை. ஆனால், அவர் எங்களுக்கு அளித்த பேட்டியை படிக்கும் எவரும் உண்மையை புரிந்து கொள்வார்கள்.அப்படிப்பட்ட பேட்டியை கொடுத்திருந்தார்.
இது குறித்து என்னிடம் பல பெரிய ஆட்கள் பேசினார்கள். ஒரு ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் தொலைபேசியில் என்னைக்கூப்பிட்டு அவரைப் பற்றி பெண்கள் விவகாரம் இருக்கிறதாமே என்று கேட்டார். அதன் பின் அதைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
டெல்லியில் இருந்து பேசிய ஒருவர் மேலும் இந்த விவகாரத்தை பற்றி எழுதினால் உங்கள் மீது வழக்குப் போடுவோம் என்றுமிரட்டினார். மீண்டும் ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் என்னுடன் பேசினார், ஜெயேந்திரரை கைது செய்து விடுவார்களாமே என்றுகேட்டார். விரைவில் கைது செய்து விடுவார்கள் என்றேன்.
தீபாவளி நேரத்தில் கைது செய்து விடுவார்களா என்று கேட்டார். ஆமாம் இரவு நேரத்தில் கைது செய்வார்கள் என நினைக்கிறேன்என்றேன்.
இப்படி பலரின் வயிற்றெரிச்சலைக் கிளறினாலும் இந்த நாட்டுக்கு செய்யும் சேவையாக சங்காராச்சாரியார் விஷயத்தைவெளிச்சக்கு கொண்டு வந்தோம் என்றார் கோபால்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications