இ-மெயில் மிரட்டல்: மதுரை, கோவைக்கு விரையும் தனிப்படை
சென்னை:
நாடாளுமன்றத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளி மதுரை அல்லது கோவையில்பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்து இரு ஊர்களுக்கும் தனிப் படை போலீஸார் விரைகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த விசாரணையில் டெல்லி போலீஸாரும், தமிழகபோலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நெல்லையில் இரண்டு இன்டர்நெட் மையங்களை சீல்வைத்து அங்கு சோதனைகள் நடத்திய போலீஸாருக்கு எந்த விதத் துப்பும் கிடைக்கவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும்டெல்லியிலிருந்து வந்த தனிப்படை போலீஸார், மேலப்பாளையத்தைச் சேர்ந்த 10 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் சிலமுக்கிய தகவல்கள் கிடைத்தன.
இந்தத் தகவல்கள் மூலம் இ மெயில் அனுப்பிய நபர் கோவை அல்லது மதுரையில் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிய வந்தது.இந்த முறை கிடைத்த தகவல் சற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், குற்றவாளி எனக் கருதப்படும் நபரைப் பிடிக்கமதுரை மற்றும் கோவைக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்த டெல்லி மற்றும் தமிழக போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் இரு ஊர்களுக்கும் தனிப்படை போலீஸார் விரைகிறார்கள். மேலும், மதுரை, கோவை போலீஸாரும் இதுதொடர்பாகஅலர்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் குற்றவாளி போலீஸ் பிடியில் சிக்குவான் என்றும் போலீஸார்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications