இட ஒதுக்கீடு கோரும் பிராமணர்கள்: இந்தி, சமஸ்கிருதத்துக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்வி, வேலை வாய்ப்பு, நீதிபதிகள் நியமனம், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிராமணசமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்)கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு சென்னையில் நடந்தது. இதில் பிரபல திரைப்பட இயக்குனர்கே.பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா, நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியன், பாஜக எம்.எல்.ஏ. ராஜா உள்ளிட்ட பல்வேறுபிராமண சமூக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான சில:

1. தமிழகத்தில் தமிழை மட்டும் பிரபலப்படுத்தாமல், சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றையும் பிரபலப்படுத்த வேண்டும். கல்விபோதனையில் இந்த இரு மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

2. கல்வி, வேலை வாய்ப்பு, நீதிபதிகள், துணை வேந்தர்கள் நியமனத்தில் பிராமணர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

3. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டமைக்காகஇந்த மாநாடு அரசைப் பாராட்டுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிராமணர் சங்க மாநாட்டில் திரைப்பட பாலச்சந்தர், சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+