பிஎஸ்என்எல் வாடகை இனி ரூ. 180 மட்டுமே!
டெல்லி:
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கைகயாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக சாதாரண தொலைபேசி இணைப்புகளுக்கானமாத வாடகை கட்டணத்தை ரூ.180 ஆகக் குறைத்துள்ளது.
இது குறித்து டெல்லியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் ஏ.கே. சின்ஹா கூறியதாவது:இந்த சலுகையால் 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவர். தற்போதுள்ள மாத வாடகைக் கட்டணத்தில் 28 சதவீதம்குறைக்கப்பட்டுள்ளது. நகரங்களில் தற்போது பொது திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கு தொலை பேசி மாத வாடகை கட்டணம்ரூ. 250 ஆக உள்ளது.
இது ரூ. 180 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ளதைப் போலவே, 50 இலவச கால்கள் தொடரும். 3 நிமிடங்கள் வரைநீடிக்கும். இக் கால்களுக்கு ஒரு காலுக்கு ரூ.1.20 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் கால ப்ரி பெய்டு கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 949செலுத்தி இந்த ப்ரி பெய்ட் கார்டு வாங்கினால் ரூ.99க்கான டாக் டைம் வசதியை பெறலாம்.
ஆயுள் கால ப்ரி பைய்ட் முறையில் பிஎஸ்என்எல் நிறுவன செல் இணைப்புகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தொடர்புகொள்ள ஒவ்வொரு காலுக்கும் ரூ.1.60 கட்டணமாகும். ஆனால் இதர செல்போன்களுக்கு தொடர்பு கொள்ள ஒரு காலுக்கு ரூ. 2கட்டணமாகும்.
பிஎஸ்என்எல் இணைப்புகளிடையே தொடர்பு கொள்ள வெளியூர் (எஸ்டிடி) காலுக்கு தலா ரூ. 2.40 பைசா கட்டணம் ஆகும்என்றார்.












Click it and Unblock the Notifications