பீகாரில் தாய் உள்பட 5 குழந்தைகள் எரித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஹாஜிபூர் :
பீகாரில் தாயும் 5 குழந்தைகளும் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர்.பீகாரில் வைசாலி மாவட்டத்தில் ரகோபூர் பகுதியில், 3 பேர் மீது கொடுக்கப் பட்ட திருட்டு புகாரை வாபஸ் வாங்க மறுத்த பெண்மற்றும் அவரது குழந்தைகள் 5 பேரை எரித்து கொலை செய்துள்ளனர்.
தன் வீட்டிலுள்ள எருமை மாட்டை திருடியதற்காக அப்பெண்ணின் கணவர் மஹ்டா கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது. தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
தங்கள் மீது கொடுக்கப் பட்ட புகாரை வாபஸ் வாங்க வற்புறுத்தியும் மஹ்டா மறுத்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள்மஹ்டாவின் மனைவி மற்றும் குழந்தைகளை எரித்து கொலை செய்தனர். குற்றவாளிகளில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளான்.மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications