நகைக்கடை அதிபர்கள் வீடுகளில் சோதனை
சென்னை:
சென்னையில் உள்ள 20 நகைக் கடை அதிபர்களின் வீடுகளில் வருமான வரித்தறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திகிலோக் கணக்கில் தங்க, வெள்ளி நகைகள், ரூ. 1 கோடி அளவுக்கு பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
டாக்டர்கள், மருத்துவமனைகள், ஸ்கேனிங் மையங்கள், திரைத் துறையினர் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் சமீபத்தில்அதிரடி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது நகைக் கடை அதிபர்களின் வீடுகளை வருமானவரித்துறையினர் குறி வைத்து அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.இதுதொடர்பாக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 20ம் தேதி சென்னை வருமான வரித்துறையினர் நகைக் கடை அதிபர்கள், பைனான்சியர்கள் ஆகியோரது வீடுகளில்சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், தங்கக் கட்டிகள், பணம் பறிமுதல்செய்யப்பட்டது.
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் மொத்தம் 20 பேருடைய வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தசோதனையின் போது கணக்கில் வராத ரூ. 5 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ தங்க நகைகள், 170 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கணக்கில் வராத ரூ. 1கோடியே 13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 6 கோடி மதிப்புள்ள கணக்கில்வராத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ. 5 கோடியே 70 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதையும் இவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ரூ. 1 கோடியே 64 லட்சம் வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்ஆல்பர்ட்.












Click it and Unblock the Notifications