உயர்நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூர் தீவிரவாதத் தாக்குதலையடுத்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டுள்ளனர்.இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலவிடுமுறைக்குப் பின்னர் உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று காலை முதல் தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏந்திய போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு வருவோரை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்திற்குக் குறிப்பிட்ட மிரட்டல் ஏதேனும் வந்திருக்கலாம். இதன் காரணமாகவே ஆயுதப் போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications