For Daily Alerts
மதுரை அருகே தானியங்கி வானிலை நிலையம்
மதுரை:
டிவிஎஸ் விவசாய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் வானிலையை துல்லியமாக கணிக்க தானியங்கி வானிலை ஆய்வு நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியால் இயங்கும் இந்த நிலையம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் காற்றின் வேகம், திசை, சூரியக் கதிர்களின் சக்தி,தரையின் வெப்ப நிலை, காற்றின் வெப்பம், ஈரப்பதம், மழை அளவு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகை தகவல்களைசேகரிக்கும் திறன் உடையது.
இதன் மூலம் கிடைக்கும் வானிலை நிலவரம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகா விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
இதே போன்ற சேவை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |