துறைமுகத்தில் மீனவர் படகு மீது துப்பாக்கிச் சூடு
சென்னை:
சென்னை துறைமுக எல்லைக்குள் வந்த மீனவர் படகு மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
துறைமுக எல்லைக்குள் மீனவர்கள் உள்ளிட்ட யாரும் நுழையத் தடை உள்ளது. துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களில் திருட்டுபோவதை தடுக்கவும் துறைமுகப் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறைமுக எல்லைப்பகுதியில் ஒரு படகு வந்தது. இதை பார்த்த ரோந்து படையினர் படகை நிறுத்தும் படி எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் படகை வேகமாக அவர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் படகில் உள்ளவர்கள்தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்று சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் சரமாரியாக சுட்டனர். ஆனால் படகில்இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த படகில் இருந்தவர்கள் வடசென்னை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. மீனவர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications