தமிழக தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி, எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
டெல்லி:
தொகுதி மறு சீரமைப்பு குழு கூட்டத்தில் 42 தமிழக தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
தமிழக தொகுதிகளின் மறு சீரமைப்பு குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. கூட்டத்துக்கு மறு சீரமைப்பு குழு தலைவர் குல்தீப்சிங் தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி, குழுவின் சிறப்பு அதிகாரி சாரங்கி, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி நரேஷ்குப்தா, தமிழக தேர்தல் கமிஷனர் பழனிச்சாமி,துணை உறுப்பினர்களான எம்பிகள் கிருஷ்ணசாமி, சுகவனம், தங்கபாலு, தனராஜ், எம்எல்ஏக்கள் விஜயபாஸ்கர், சிவசாமி,தமிழ்மொழி, போளூர் வரதன், பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்பாக கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்டதையும், பொது மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும்பெற்ற கருத்துக்களையும் எம்பி, எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
சில தொகுதிகளின் இடையில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஊர்களும் புகுத்தப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு குழு தயாரித்த வரைவு திட்டத்தின்படி ஏற்கனவே உள்ள 42 சட்டசபை தொகுதிகளின் பெயர்கள்மாற்றப்பட்டுவிட்டன. இத் தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி, எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபெயர்களே நீடிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications