போன்: ஜெ. விசாரிக்க முலாயம் கோரிக்கை
டெல்லி:
தனது டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சார்யா, பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றுஉத்தரப் பிரதேச முதல்வர் முயலாயம் சிங் யாதவ் கோரியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தனது டெலிபோன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் இதற்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் என் டெலிபோனையும், கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங்கின் டெலிபோனையும் ஒட்டுக் கேட்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பேசிய போது, அவர்டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். ஆனால் டெலிபோன் ஒட்டுக் கேட்பதற்காக டெல்லி போலீசிடம்கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என்றார்.
அது போலியான கடிதம் அல்ல. சோனியா உத்தரவிட்டதை மூடி மறைக்கவே இவ்வாறு கூறுகின்றனர்.
எனவே இந்தப் பிரச்சினை குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்துவதை நான்ஏற்கமாட்டேன். சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை இல்லை. உத்தரபிரதேச போலீசார் பாரபட்சமின்றி பல வழக்குகளைவிசாரித்துள்ளார்கள்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசாரை விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இல்லையென்றால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, பிகார் முதலமைச்சர்நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்றார் முலாயம் சிங்.
முலாயம் சிங்கின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந் நிலையில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கின் டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகடெல்லி போலீசார் ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் பணிபுரியும் குல்தீப் சிங் என்பவரை கைது செய்துள்ளனர்.
குல்தீப் சிங், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேந்திராவுடன் கூட்டு சேர்ந்து அமர் சிங்கின் தொலைபேசிஎண்ணான 39565414 என்ற ரிலையன்ஸ் டெலிபோனை ஒட்டுக் கேட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குல்தீப் சிங்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், குல்தீப்சிங் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுவரை டெலிபோன் ஒட்டு கேட்டது தொடர்பாக பூபேந்திரா மற்றும் குல்தீப் சிங் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3வது நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த அசாம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை இன்று கூட்டுகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தவகல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், காங்கிரஸ் மீது மூத்ததலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளது துரதிஷ்டவசமானது. காங்கிரஸ்தொடர்பான செய்திகள்பும் சரி இப்போதும் சரி இது போன்ற காரியங்களை செய்ததில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications