என்னை சுட்டுக் கொல்லுங்கள்: சதாம் ஆவேசம்
வாஷிங்டன்:
எனக்கு எப்படியும் மரண தண்டனையே தந்து விடுவீர்கள். ஆனால், நான் தூக்கில் தொங்கி சாக விரும்பவில்லை. ராணுவதளபதியான நான் துப்பாக்கியால் சுடப்பட்டே சாக விரும்புகிறேன் என ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தினர் வசம் சிக்கிய சதாம் உசேன் மீது தற்போது பாக்தாத் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.பாக்தாத் நீதிமன்ற வளாகத்தில் சதாமை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேசினர்.அப்போது, அவர்களிடம் சதாம் உசேன் கூறியதாக வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:
நான் சாவை கண்டு பயப்படவில்லை. நான் தவறு செய்யவில்லை. இருந்தாலும் நான் சாக வேண்டும் என அமெரிக்காவிரும்புகிறது. சாவை வைத்து என்னை மிரட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஈராக் மக்களை விட எனது உயிர் முக்கியமானதுஅல்ல.
நான் ராணுவ தளபதியாக இருந்தவன். எனவே தூக்கில் தொங்கி சாவதை விட துப்பாக்கியால் சுடப்பட்டு சாவதையேவிரும்புகிறேன். ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருவது எனக்கு உற்சாகத்தைஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் அரபு நாடுகளுக்கு நான் உதவி புரிந்துள்ளேன். அந்த நாடுகள் தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஈராக் மக்களுக்காக, அரபு நாடுகளின் மக்களுக்காக, உலகத்தில் உள்ள மக்களுக்காக அமெரிக்காவுக்கு எதிராக நான்போரிட்டேன்.
அமெரிக்காவால் புதிய உலகை ஏற்படுத்த முடியாது. அதற்கான முயற்சியை ஈராக்கில் மேற்கொண்டு தோல்வியைதழுவியுள்ளனர். எனவே புஷ்க்கு எதிராக நிற்பது பிற நாடுகளை காப்பாற்றுவது போன்றதாகும். இனிமேல் இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் முன் அமெரிக்கா ஆயிரம் முறை யோசிக்கும்.
ஈராக் மக்கள் நாட்டு பற்று மிக்கவர்கள். வெளிநாட்டு ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்க ராணுவ வீரர்களும்,மற்ற நாட்டு வீரர்களும் ஈராக்கை விட்டு விரைவில் ஓடுவார்கள்.
அமெரிக்காவின் கைப்பாவையாக இங்கு செயல்படுபவர்களும் அதற்கு முன் ஓடி விடுவார்கள்.
இவ்வாறு சதாம் உசேன் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications