கடல் நீர் to
சென்னை:
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர்ராசா இடையூறு செய்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 12 பேரும் தமிழக நலனுக்குவிரோதமாகவே நடந்து கொள்கிறார்கள் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதை நிரூபிக்கும் விதமாக திமுகவைச் சேர்ந்தமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சர் ஏ.ராசா நடந்து கொள்கிறார்.சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்தால் ரூ. 1,000 கோடி தருவதாக மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ஆனால் அத்திட்டத்திற்கு வெறும் ரூ. 5 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ள அவர், சென்னைக்கும், தமிழகத்திற்கும்வரும்போதெல்லாம், இத்திட்டம் குறித்து தமிழக அரசுத் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று பொய்யானபிரசாரத்தை செய்து வந்தார்.
ஆனால், சென்னை மாநகருக்கு தினசரி 10 கோடி லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கித் தரும் திட்டத்தை மேற்கொள்ள ஐபிஆக்ஸியல் என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன்படி ஆலை அமைப்பதற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்படவிருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு ஒப்புதல்அளிப்பதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேவையில்லாத தாமதம் செய்து வருகிறது.
திட்டத்தை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகும், அந்தக் கோப்பில் கையெழுத்திடாமல் திமுகவைச்சேர்ந்த அமைச்சர் ஏ.ராசா முடக்கி வைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் குறித்து சற்றும் கவலைப்படாமல் அவசர, அவசரமாக சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்த இவர்கள், இப்போதுகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மட்டும் சுற்றுச்சூழல் கவலையை பெரிய அளவில் வெளிப்படுத்தி தங்களது துரோகநோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கோப்பில் கையெழுத்திடுவதற்குப் பதில் சகலவிதமான கேள்விகளை எழுப்பி திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறார் ராசா. இதன்மூலம் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் திமுகவும், அதன் மத்திய அமைச்சரும்.
ராசாவின் நடவடிக்கை, தமிழக நலனுக்கு துரோகம் இழைப்பதாகும். இதற்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications